* காஞ்சி பெரியவாளின் வாக்கு*
இந்த வாக்கை கேட்டு தான், மனது அமைதி அடைகிறது.
அவர் சொன்ன இந்த வாக்கு சீக்கிரம் பலிக்கட்டும்..
இது எனக்கு மட்டுமல்ல இந்து மதத்தை போற்றக் கூடிய அனைவருக்கும்..
ஒரு ஆசாரசீலர் பெரியவா கிட்ட போய் மிக வினயத்துடன் பெரியவா இப்போ எல்லாம் மதமாற்றம் அதிகமா ஆயிண்டே இருக்கு போற போக்க பாத்தா நம்ம தேசத்துல ஹிந்துக்கள் கொறஞ்சி மற்ற மதத்தவர் அதிகமா ஆயிடுவா போல இருக்கே. பெரியவா தான் இந்த இக்கட்டான சூழலுக்கு முடிவு காணனும் என்று தன் வருத்தத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். உடனே பெரியவா இப்போ மாட்டும் இல்ல எப்பவுமே இந்த பிரச்சனை நம் பாரத தேசத்துல உண்டு. பகவத் பாதாள் காலத்துல பௌத்த ஜைன உள்பட 72 மதங்கள் இருந்தது. ஆனா பகவத் பாதாள் அனைத்தையும் கண்டனம் செய்து நம் சனாதன தர்மத்தை நிலைக்க செய்தார். நமது சனாதன தர்மமானது யுகங்களை கடந்தது. அதற்க்கு எப்பவுமே அழிவில்லை. க்ஷீணம் ஆவது போல தெரியும் ஆனா எப்பவுமே நமத தர்மம் க்ஷீநிப்பது இல்லை.
மழைக்காலத்துல பனைமரத்த சுத்தி பல கொடிகள் வளரும். அந்த கொடிகள் பனைமரத்தயே மறைக்குறா போல மரத்து மேல் படர்ந்து வளரும். ஆனா அந்த கொடிகளுக்கு ஆயிசு அதிகம் இல்லை.
பலமா ஒரு காத்து அடிச்சாளோ, மழை முடிஞ்சு வேயில் காலம் வந்த உடனே மரத்தை மறைத்திருக்குற அந்த கொடிகள் எல்லாம் காஞ்சி கீழே விழுந்துடும். ஆனா பனைமரம் எந்த பாதிப்பும் இல்லாம அப்படியே இருக்கும். அது போலத்தான் நம் சனாதன தர்ம மதமும் பனைமரம் போல ஸ்திரமா இருக்கும். அதற்கு என்னைக்குமே அழிவோ க்ஷீனமோ இல்லை.
வீணா கவலைப்படாம உன் ஸ்வதர்மத்துள இருந்து வழுவாம உனக்கு விதிக்கப்பட் நித்ய கர்மாக்களை ஒழுங்காசெய்து வா.அதுவே நீ நம் மதத்துக்கு செய்யுற மிகப்பெரிய உபகாரம். அனைத்தையும் காமாக்ஷி பாத்துண்டே இருக்கா . எப்போ எதை செய்யனும் அவளுக்கு தான் தெரியும்.#shared#
No comments:
Post a Comment