Showing posts with label #periyava #periyavaa #mahaperiyavaa. Show all posts
Showing posts with label #periyava #periyavaa #mahaperiyavaa. Show all posts

Wednesday, July 1, 2020

பெரியவா வார்த்தை மதிக்கணும் #mahan #periyava #periva

🕉️   பெரியவா வார்த்தை மதிக்கணும்
                                                                                                                                                                                                      
 அவர் காலத்தில்  காஞ்சி மஹா பெரிய வாளை  தரிசிக்காதவர்களே கிடையாது.   சபரிமலை ஐயப்ப  பக்தர்கள் ரெண்டு பஸ் நிறைய வந்து, ஒரு தடவை தரிசித்தபோது அவர்

''இது வரை எங்கெல்லாம் போனீர்கள்? இன்னும் எங்கெல்லாம் போகணும்?

''நிறைய இடம்  போய் தரிசனம் பண்ணோம்  பெரியவா.  இனிமே  வைக்கம், குருவாயூர், சோட்டாணிக்கரா போகப் போறோம்''

''ஓஹோ.  போறவழியிலே, திருச்சி மலைக்கோட்டை  மாத்ருபூதேஸ்வரர், திருவானைக்கா அகிலாண் டேஸ்வரி, , ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் முருகன், நெல்லையப்பர், குற்றால நாதர் எல்லாரையும் தரிசியுங்கோ ''

பஸ் ரெண்டுலே  ஒரு பஸ்  பெரியவா சொன்ன இடம் எல்லாம் போய்  ஜாக்கிரதையா திரும்பியது.   பத்து நாள் கழித்து சேதி வந்தது. 

'அங்கெல்லாம் வேண்டாம்  நேராக  பிளான் படி  சபரிமலை தான் போவோம் '' என்றவர்கள் இன்னொரு பஸ்ஸில்  புறப்பட்டு வழியில் விபத்து.   பல பேருக்கு கைகால் முறிவு. 
ஜாக்ரதையாக வந்த ஐயப்ப பக்தர்கள் காஞ்சி பெரியவா முன்பு  ஐயப்ப கோஷம் பலத்த ஒலியோடு முழக்க  சரண கோஷம் முழுதும் கண்களை மூடி ஆத்ம த்யானத்தில் இருந்தவாறு செவிமடுத்து  அவர்களுக்கு  பிரசாதங்கள் கொடுத்து அனுப்பினார்.

இன்னொரு சம்பவம்.  ஒரு பெரிய பஸ் நிறைய கர்நாடக புனித பயணம்  சென்னை பக்தர்கள்  காஞ்சியில் பெரியவா தரிசனத்துக்கு பிறகு  நேராக கர்நாடகா செல்ல அவர் ஆசி பெற சென்றார்கள். கை  உயர்த்தி அவர்களை ஆசிர்வதித்து, 

''பெரிய கூட்டமா வந்திருக்கிறீர்களே. என்ன விஷயம்?'

'''கர்நாடக புனித யாத்திரை.  முன்னாலே  பெரியவா தரிசனம் பெற வந்தோம் ''

''''கர்நாடகாவில் எங்கே முதல் தரிசனம்?'''

''மங்களூர் போய்,  அப்புறம் தலைகாவேரி ஸ்னானம், சுப்ரமண்யா, தர்மசாலா, உடுப்பி, கொல்லூர் மூகாம்பிகை, சிருங்கேரி   கடீல் துர்கா பரமேஸ்வரி, ... இப்படி பிளான் ''

''''இருங்கோ.... உங்க லிஸ்ட்லே ஒரு முக்கியமான  இடத்தை உட்டுட்டேளே ...  '''';
எல்லோரும் விழித்தார்கள்.  பெரியவாளே  தொடர்ந்தார்.
''ஹொரநாடு க்ஷேத்ரா..  அம்பாள் அங்கே அன்னபூரணி. .  நாள் சொல்றபடி செய்யுங்கோ.  மங்களூரிலே இருந்து சிருங்கேரி,துங்கா ஸ்னானம். அப்புறம்   அங்கே சிருங்கேரி குரு தர்சனம், அவர் ஆசியோடு சாரதாம்பாளை தரிசித்துட்டு அப்புறமா  மீதி இடம் எல்லாம் போங்கோ.''

பெங்களு ரிலிருந்து மங்களூர் போய், ஒரு கல்யாண மண்டபத்தில்  தங்கி, மறுநாள் காலை புறப்படும் நேரம் ஒருவர்   '' டைம் சேவ்  பண்ணனும்.  திட்டமிட்டபடி  முதலில் தலைகாவேரி போவோம். ஸ்னானத்துக்கு அப்புறம்  மீதி இடம்  சிருங்கேரி எல்லாம்  போவோமே?'' என்கிறார்.  மற்றவர்களும் சரி என்றதால்,  பஸ் தலைகாவேரி சென்றது.  அங்கிருந்து இரவு  8 மணிக்கு  சிருங்கேரி பயணம்.   இரவு  மலைப்பாதை. பாதி வழியில்  பஸ் டயர்கள் ''புஸ்''  என்ன செய்வது. மழை வேறு?  பசி.  ஒருவழியாக இரவு 10 மணிக்கு மாற்று சக்கரங்கள் பொருத்தி கிளம்பினார்கள்.   இரவு  11 மணி ஆகியும்  சிருங்கேரி வரவில்லையே? என்ன ஆயிற்று. வழி தப்பிவிட்டதா  பஸ்?
வழியில் ஒருவர்  தென்பட்டார்.  பஸ்ஸை நிறுத்தி அவரை வழி கேட்டார்கள். 

''அடடே,  16 கி.மீ. தூரம் முன்பே  வலது பக்க  சாலையில் அல்லவோ திரும்பி இருக்க வேண்டும்.? தப்பாக வந்து விட்டீர்களே. இப்படி போனால் சிருங்கேரி வராது.  அந்த   குறுகிய  மலைப்பாதையில் பஸ்  எப்படி திருப்புவது. டிரைவர் இறங்கி  பார்த்தார். 
'
''கவலைப்படாதீங்க. மெதுவா  கொஞ்சம் கொஞ்சமா பஸ்ஸை  REVERSELE
 பின்பக்கமாகவே  பிரேக் பிடிச்சு பிடிச்சு  வந்த வழியே   ஓட்டறேன்.  வண்டியை திருப்ப  இடம் இல்லே. நிறைய  வளைவுகள்.  உள்ளே  எல்லோரும்  ராமநாமம் பிரார்த்தனை பண்ணினார்கள்.  திடீரென்று  ட்ரைவர் உரக்க.....
''ஐயா  நான்  எவ்வளவு அழுத்தி பிரேக் போட்டாலும் வண்டி நிக்கமாட்டேங்குதுங்க.  'வண்டி தானாகவே மேட்டிலிருந்து கீழே இறங்குதுங்க...''.

''சிருங்கேரி சாரதாம்பா தாயே  காப்பாத்து மா.   மஹா ஸந்நிதானம் , காஞ்சி பரமாச்சார்யா  ப்ரபோ  காப்பாத்துங்கோ''  பக்தர்கள்  பராதீனமாக வேண்டினார்கள்.

சில வினாடிகளில் வண்டி நின்றது.  ''பிரேக் வேலை செய்யுதுங்க''  நள்ளிரவு  12 மணி. 

 விடிகாலை    2மணி வாக்கில் சிருங்கேரி மடத்தின் வாசலில் வண்டி நின்றபோது ஒரு கனபாடிகள் நின்று வரவேற்றார்.

''மெட்றாஸ் காராளா ? இறங்கி கைகால் அலம்பிண்டு  வாங்கோ . சாப்பிடுங்கோ.  பசியா இருப்பேள் . சூடா  அரிசி உப்புமா  கத்திரிக்கா  கறி  உங்களுக்கு  ரெடி பண்ணிருக்கு''.
''சுவாமி  ஆச்சர்யம்.  நாங்க  வரோம்னு  எப்படி தெரிஞ்சுது. லெட்டர் கூட போடலியே?
''மஹா சந்நிதானத்துக்கு எல்லாம் தெரியும்.  என்னை ராத்திரி 11 மணிக்கு கூப்பிட்டனுப் பினார். ஒரு பஸ் நிறைய  50-55 பக்தா  மெட்ராஸ்லேருந்து  நல்ல பசியோடு வருவா.  உள்ளே போய்  அரிசி உப்புமா  பண்ண சொல்லு. வாசல்லே  நில்லு வந்தா அழைச்சுண்டு வா '' 
அப்போ  மஹா சன்னிதானம்   ஸ்ரீ   ஸ்ரீ  அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள்.

பஸ் பிரயாணிகள் அதிர்ந்து போய் நின்றபோது அந்த கனபாடிகள் இன்னொரு குண்டு வீசினார்.

  ''இதுக்கே இப்படி அதிசயப்படறேளே. நாளை காலம்பற ஒரு விஷயம் சொன்னா எப்படி எடுத்துப்பேளோ ? 

ட்ரைவரோடு  54  வாழை இலைகளில் மேலே மேலே போடப்பட்ட   சுட சுட  இருந்த  அரிசி உப்புமா  காலியாயிற்று.

காலையில்  துங்கா தீர ஸ்னானம். எல்லோரும் மஹா சந்நிதானத்தின்  தரிசனத்துக்கு காத்திருந்தபோது  அந்த கனபாடிகள்   வந்தார்
.
'' காலையில் இன்னொரு விஷயம் சொல்வதாக   சொன்னீர்களே அது என்ன ?

''ஒண்ணுமில்லே.  நேத்து ராத்திரி பன்னெண்டு மணிக்கு   மஹா சன்னிதானம்  அவருடை அறையிலே ஏதோ சாஸ்த்ர  புஸ்தகம் படிச்சிண்டு இருந்தார்.  நான்  வெளியே  ஹாலில் உட்கார்ந்துண்டு இருந்தேன். மஹா சன்னிதானம் திடீர்ன்னு எழுந்து ரெண்டு கையையும் செவுத்து மேலே வச்சு  அழுத்தி தள்ளி ஏதோ மந்திரம் சொன்னதை பார்த்தேன்.  அவர் செய்யறதை பார்த்தா சுவர் கீழே விழாம  தடுக்கிற மாதிரி தோணித்து.

ஐந்து ஆறு நிமிஷம் கழிஞ்சு அப்புறம் மஹா ஸந்நிதானம்  பெரியவா என்கிட்டே வந்தா





''என்ன பண்ணேன்னு  பாக்கிறியா.   சாரதாம்பாளை தரிசிக்க வந்துண்டு இருக்கிற மெட்ராஸ் பக்தர்கள்  பஸ் வழி தவறிடுத்து.  மலை பள்ளத்தில் சரியப் போறது. பிரேக் பிடிக்கல.   அம்பாளையும்  என்னையும்  கூப்பிடறா.  அம்பாளை வேண்டிண்டு  நான்  பஸ்  பள்ளத்தில் சரியாம பிடிச்சுண்டு  பிரார்த்தனை பண்ணேன். ஒருவழியா பஸ் பிரேக் வேலை செஞ்சப்பிறம் கையை
  விட்டேன்.'''

இதைக் கேட்ட பிரயாணிகள் நடுங்கினர்.   மஹா சன்னிதானம் தரிசனம் கொடுத்தார். சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்கள்.   பஸ் பிரயாணிகள் தலைவரிடம்   ''பெரியவா சொன்னா  கேக்கணும் '' காரணமாக தான் சொல்வா ன்னு புரியணும்''  என்கிறார்.மஹா சன்னிதானம் உச்சரித்த  மந்திரம்  மஹா ம்ருத்யுஞ்சய ஜெப  மந்திரம் .                                                                            🕉️🙏🕉️

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - இதுக்கு மேல என்ன பதவி இருக்கு?

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - இதுக்கு மேல என்ன பதவி இருக்கு?

ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள உத்திரகோசமங்கை ஸ்ரீமங்களநாதர் கோயிலுக்குச் சென்றபோது, அங்கு அன்பர் ஒருவரை சந்தித்தேன். அப்போது தன்னுடைய தந்தைக்கு, காஞ்சிப் பெரியவர் அருளிய… நெகிழ வைக்கும் சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அன்பரின் தந்தை, சென்னை நீதிமன்றத்தில் கிளார்க்காகப் பணிபுரிந்து வந்தவர். அப்போது காஞ்சிப் பெரியவர், சென்னை நகரில் முகாமிட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் அன்பரின் தந்தையும் பங்கேற்று சேவை புரிந்தாராம். அன்பரின் தந்தை ஓடியாடி உழைத்த விதத்தை காஞ்சி பெரியவாள் நேரில் கண்டார்.



முகாம் நிறைவுறும் நாள் வந்தது. அன்றைய தினம், அன்பரின் தந்தையைக் கரிசனத்துடன் அழைத்த பெரியவாள், ”எங்கே வேலை பாக்கறே?” என்று கேட்டிருக்கிறார்.

”கோர்ட்ல கிளார்க்கா வேலை பாத்துண்டிருக்கேன்” என்று பவ்யமாக பதில் அளித்தாராம் அன்பரின் தந்தை.

உடனே பெரியவாள், ”இதுக்கு மேல என்ன பதவி இருக்கு?” என்று கேட்க… ”ஷெராஸ்தார்” என்று பதிலளித்திருக்கிறார் இவர்.

இதையடுத்து பெரியவாள், ”நீ ஷெராஸ்தார் ஆயிடுவே” என்று ஆசீர்வதித்திருக்கிறார்.

சாதாரண கிளார்க் உத்தியோகத்தில் இருந்து ஷெராஸ்தார் பொறுப்புக்கு வருவதற்குக் கல்வி உள்ளிட்ட தகுதிகள் அவசியம். ஆனால் இந்த அன்பரின் தந்தைக்குக் கல்வித் தகுதி மட்டும் இல்லை. எனவே, ‘இந்தப் பதவி சாத்தியமே இல்லை’ என்று தீர்மானித்து, காஞ்சிப் பெரியவாளின் ஆசியை அடுத்த கணத்தில் இருந்து மறந்தே போனார்.

இதையடுத்து ஒரு சில நாட்களில் டெல்லியில் இருந்து தலைமை நீதிபதி சென்னைக்கு வந்துள்ளார். அவருக்குத் தேவையான பணிவிடைகளை சிறப்பாகச் செய்து கொடுத்தாராம் அன்பரின் தந்தை.

சில நாட்கள் கழித்து, வேலை முடிந்து தலைமை நீதிபதி டெல்லிக்குக் கிளம்பிச் செல்லும்போது, நீதிமன்ற அலுவலகக் குறிப்பேட்டில், ‘இந்த கிளார்க்கின் பணி பாராட்டுக்குரியது. அடுத்த பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர் இவர்’ என்று பரிந்துரை செய்திருந்தாராம்!

பிறகென்ன? உரிய நேரத்தில் அந்தப் பரிந்துரை உயரதிகாரிகளால் கவனிக்கப்பட்டு, அன்பரின் தந்தைக்கு ஷெராஸ்தார் எனும் பதவி உயர்வு கிடைத்ததாம்.

சில வருடங்களுக்குப் பின், காஞ்சிப் பெரியவர் மீண்டும் சென்னை வர… அன்பரின் தந்தை அந்த முகாமுக்குச் சென்று பெரியவாளை தரிசித்து வணங்கியிருக்கிறார்.

”என்ன… ஷெராஸ்தாரர் ஆயாச்சா?” என்று மெள்ள புன்னகைத்தபடியே பெரியவாள் கேட்டதும், அந்த நடமாடும் தெய்வத்தின் தீர்க்க தரிசனத்தை எண்ணி வியந்து போனாராம் அன்பரின் தந்தை!

பெரியவா சரணம்!

#mahan #periyava #periva அரிசி வாங்கலியோ...அரிசி! | Periyava Charanam


#mahan #periyava #periva அரிசி வாங்கலியோ...அரிசி! | Periyava Charanam

அரிசி வாங்கலியோ...அரிசி!
---------------------------------------------

அந்தக் காலத்தில் அரிசியைத் தெருவில் கூவி விற்பார்கள். மக்களும் தெருவில் வரும் வியாபாரியிடம் பேரம் பேசி வாங்குவர்.

ஒருநாள் வியாபாரி ஒருவர் தெருவில் அரிசி விற்றுச் சென்றார். அவரின் சத்தம் காஞ்சி மகாசுவாமிகள் முகாமிட்டிருந்த இடம் வரை தெளிவாகக் கேட்டது. பக்தர்களுக்குத் தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார் சுவாமிகள். வரிசையில் மெல்ல நடந்து வந்தாள் மூதாட்டி ஒருவர்.

அவர் காது கேட்காததால், வலதுகையால் செவி மடலைக் குவித்தபடி மற்றவர் பேச்சைக் கேட்டார். இந்நிலையில் சுவாமிகளை வணங்கி, ''பெரியவா...! எனக்கோ வயதாகி விட்டது. எந்த திருநாமத்தை ஜபித்தால் எனக்கு நற்கதி கிடைக்கும் என அறிவுறுத்தக் கூடாதா?'' என்றார்.

சுவாமிகள் தீர்த்தம் வழங்கியபடி, ''தெருவில் அரிசி வியாபாரி கூவிக் கூவிச் சொல்கிறாரே? அதன்படி நடந்து கொள்!'' என்றார் சிரித்தவாறே.
மூதாட்டிக்கு புரியவில்லை. அருகில் நின்றவர்களுக்கும் புரியவில்லை.
''என்ன! சொல்றது புரியலையா?'' எனக் கேட்டார் சுவாமிகள்.

''எப்போதும் 'ஹரி' 'சிவ' நாமத்தையும் ஜபித்தால் போதும். துக்கமெல்லாம் விலகும். மனதில் நிம்மதி பிறக்கும். அரிசி வியாபாரி என்ன சொல்லிக் கூவுகிறார் தெரியுமோ? 'அரிசி வாங்கலியோ... அரிசி' என்று தானே கூவுகிறார்? யோசித்தால் புரியும். அரியும், சிவாவும் இருக்குமிடத்தில் எல்லா மங்கலங்களும் உண்டாகும். இத்திருநாமங்களை ஜபித்தால் பாவம் தொலையும். 'அரிசி வாங்கலியோ' என்பதைக் கேட்கிற போது வயிற்று ஞாபகம் வந்தால் மட்டும் போதாது. ஆன்மாவின் ஞாபகமும் நமக்கு வர வேண்டும். வயிற்றுப் பசிக்கு அரிசியைச் சமைத்துச் சாப்பிடலாம். ஆன்மாவின் பசிக்கு அரி, சிவ நாமங்களை இடைவிடாது நாம் ஜபிக்க வேண்டும்!''

சுவாமிகளின் சிலேடையான பேச்சைக் கேட்டு பக்தர்கள் மகிழ்ந்தனர்.

மகா பெரியவா சரணம்.

Thursday, April 9, 2020

சீதாப்பழம் குடுக்காம போறியே? #periyava #periyavaa #mahaperiyavaa,

சீதாப்பழம் குடுக்காம போறியே?

மகா பெரியவாளைத் தரிசிக்கும்போது வெறும் கையுடன் செல்லக் கூடாதே என்பதற்காக குசேலர் அவல் கோண்டு போன மாதிரி ஒரு சீதாப்பழம் கொண்டுபோன ஏழைப் பாட்டி.

ஒரு விள்ளல் சீதாப்பழம் சாப்பிட்டு,பாட்டிக்கு பூரிப்பை ஏற்படுத்திய மகா பெரியவா.

கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.புத்தகம்-பெரியவா பெரியவாதான்.
(சற்று சுருக்கப்பட்டுள்ளது)


மகா பெரியவாளின் அனுக்ரஹத்துக்கு உள்ளான இன்னொரு பெண்மணி. பெயர் - சுந்தா சுந்தரம்.

காஞ்சிப் பெரியவா மீது அப்படி ஒரு பக்தி. காஞ்சி சென்று மகா ஸ்வாமிகளின் தரிசனம் பெற்று, அந்த ஆனந்த வெள்ளத்தில் திளைப்பார். மகா பெரியவாளின் திருச்சந்நிதியின் எதிரே அமர்ந்து வெகு நேரம் தரிசித்துக் கொண்டிருப்பார்.

எப்போது காஞ்சி ஸ்ரீ மடத்துக்கு மகா பெரியவாளின் தரிசனத்துக்குச் சென்றாலும், ஒரு கூடை ரோஜா மலர்களைக் கொண்டு செல்வது சுந்தா சுந்தரத்தின் வழக்கம்.

வழக்கம்போல் ஒரு நாள் கூடை நிறைய புத்தம் புது ரோஜாப் பூக்களை வாங்கிக்கொண்டு காஞ்சி ஸ்ரீ மடத்துக்குப் போனார். அன்றைய தினம், சுந்தா சுந்தரத்துடன் அவரது குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு பாட்டியும் சென்றிருந்தார். மகா பெரியவாளைத் தரிசிக்கும்போது, வெறும் கையுடன் செல்லக் கூடாதே என்பதற்காக, குசேலர் அவல் கொண்டு போன மாதிரி, ஒரு சீதாப்பழத்தை எடுத்து வைத்திருந்தார்.

மகா பெரியவாளைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் வரிசையில் சென்று கொண்டிருந்தனர். ஆளாளுக்குக் கையில் ஒரு மூங்கில் தட்டில் ஆப்பிள், வாழைப்பழம்,மாம்பழம் என்று விதம் விதமான -காஸ்ட்லியான பழங்களை வைத்துக்கொண்டு நின்றிருந்தனர்.

தரிசனம் செல்லும் வரிசையை சீர் செய்து கொண்டிருந்த மடத்து சிஷ்யர் ஒருவர், இந்தப் பாட்டியின் கையில் இருந்த சிறிய சீதாப்பழத்தைப் பார்த்து விட்டு, ' பாட்டி… இது மாதிரி பழங்களை எல்லாம் பெரியவாளுக்குக் கொடுக்கக் கூடாது. கொடுத்தாலும், அவர் ஏத்துக்க மாட்டார்.இதைக் கொடுத்துடாதீங்கோ நீங்க கொடுக்கலேன்னா ஒண்ணும் குறைஞ்சு போயிடாது…சாதாரணமா ஒரு நமஸ்காரம் மட்டும் பண்ணிட்டுப் போங்கோ' என்று சற்று அலட்சியமாகச் சொன்னான்.

இதைக் கேட்ட பாட்டியின் மனம் வருந்தியது.தன் சக்திக்கு ஏற்ற மாதிரி எதையாவது பெரியவாளுக்கு, அர்ப்பணிக்கலாம் என்று வந்தால் 'கூடாது' என்று தடுக்கிறானே…ஒருவேளை மகாபெரியவா இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டாரோ? என்று யோசித்து, அந்த சீதாப்பழத்தை எவரும் அறியா வண்ணம் தன் முந்தானையில் இறுக்கமான மனதுடன் முடிந்து கொண்டார்.

சுந்தா சுந்தரத்தின் முறை வந்தது. தான் காணிக்கையாகக் கொண்டு வந்த மூங்கில் தட்டை, பெரியவாளுக்கு சமர்ப்பித்துவிட்டு,பிரசாதம் பெற்று திருப்தியுடன் நகர்ந்தார்

அடுத்து சீதாப்பழ பாட்டியின் முறை.

கைகளைக் குவித்து மகா பெரியவாளை வணங்கி, அதன் பின் கன்னத்தில் போட்டுக் கொண்டு ஒரு நமஸ்காரம் செய்து, பிரசாத்துக்காக கையை நீட்டினார்.

மகா பெரியவா பிரசாதம் கொடுக்கவில்லை.


'பிரசாதம் தாங்கோ பெரியவா' என்று கேட்டார் பாட்டி..

புன்னகையுடன் பாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தார் திரிகால ஞானியான மகா பெரியவா.

தன் தரிசனம் முடிந்ததால் சுந்தா சுந்தரம் சற்றே விலகி நிற்க, அவருடன் வந்த பாட்டி, மகா பெரியவாளின் அருகே வந்து கையெடுத்துக் கும்பிட்டு நின்று கொண்டிருந்தார். கண்கள் பணிக்க அந்த தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் சில விநாடிகளுக்கு பிறகு பிரசாதம் வேண்டித் தன் இரு கைகளையும் ஒரு நடுக்கத்துடன் பெரியவாளை நோக்கி நீட்டினார்.

ஆனால்,மகா பெரியவா பிரசாதம் கொடுக்கவில்லை.'மொதல்ல நீ கொண்டு வந்த பழத்தை எங்கிட்ட கொடு,அப்புறமா பிரசாதம் தர்றேன்' என்று சிரித்தார்.

பாட்டி தவித்துப் போனார். பெரியவா என்ன பழத்தைக் கேட்கிறார் என்பது புரியவில்லை. காரணம் எவருக்குமே தெரியாத வண்ணம் முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் சீதாப்பழம் மகா பெரியவாளுக்கு எப்படித் தெரியும் என்கிற சந்தேகம்தான். எனவே பெரியவா இதைத்தான் குறிப்பிட்டுக் கேட்கிறார்' என்று தீர்மானித்து சீதாப்பழத்தைச் சட்டென்று எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை பாட்டிக்கு.

அதோடு, பெரியவாளைத் தரிசிப்பதற்காக இந்தப் பாட்டி வரிசையில் நின்றுகொண்டிருக்கும்போது ஒரு சிஷ்யன் பாட்டியிடம் வந்து சொல்லி விட்டானே - பெரியவாளுக்கு சீதாப்பழம் பிடிக்காது..அதைக் கொடுத்துடாதீங்கோ' என்று.இந்த வாசகம்தான் பாட்டியின் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. எனவே, 'பெரியவாளுக்குப் பிடிக்காது என்று சொல்லி விட்டான்.அதனால் தப்பித் தவறியும் இதைக் கொடுத்து பெரியவாளின் அபசாரத்துக்கு ஆளாகி விடக் கூடாது' என்று தீர்மானமாக இருந்தார் பாட்டி.

ஆனால்,அந்தப் பரப்பிரம்மம் விடுமா? தனக்கு எதைக் கொடுக்க வேண்டும் என்று மனதில் சங்கல்பம் செய்து கொண்டு இந்தப் பாட்டி இங்கே வந்திருக்கிறார் என்பதை அறியாதவரா அவர்?.

'எங்கே, நீ கொண்டு வந்த சீதாப்பழம்? அதைக் கொடு மொதல்லே,எனக்காகத்தானே கொண்டு வந்தே?' என்று பட்டவர்த்தனமாக, புன்னகை விலகாமல் பாட்டியைப் பார்த்துக் கேட்டே விட்டார்.

இனியும் பெரியவாளிடம் ஏதாவது பேசி சமாளிக்க முடியாது. வாயைத் திறந்து சீதாப்பழம் கொடு என்று கேட்டு விட்டார்.எனவே, புடவை முந்தானையில் இருந்து அதை எடுத்துத் துடைத்துக் கொடுத்தார்.

சீதாப்பழம் பாட்டியிடம் இருந்து, மகா பெரியவாளுக்கு மாறியது. அந்த சீதாப்பழத்தை எப்படி சாப்பிட வேண்டுமோ, அந்த முறையில் பக்குவமாக ஒரு துளி எடுத்துச் சாப்பிட்டார் மகாபெரியவா. இதை நேருக்கு நேர் காணும் பாக்கியம் பெற்ற பாட்டி சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார்.

பிறகு பாட்டியைப் பார்த்து,' ஆசையோட நீ கொண்டு வந்த சீதாப்பழத்தை ஒரு விள்ளல் எடுத்து ஒன் கண் முன்னாலயே போட்டுண்டுட்டேன்,பார்த்தியா' என்று சொல்லி பெரிதான ஒரு சிரிப்பு சிரித்து,'இப்ப தர்றேன் ஒனக்குப் பிரசாதம் வாங்கிக்கோ' என்று பிரசாதத்தை நீட்டினார்,மகா பெரியவா.

சுந்தா சுந்தரமும்,பாட்டியும் மீண்டும் ஒரு முறை மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, அங்கிருந்து பூரிப்புடன் வெளியே வந்தனர்.

Sunday, February 9, 2020

#ஸ்ரீராம_ராமேதி #சுலோகத்தை #periyava #periyavaa #mahaperiyavaa

#ஸ்ரீராம_ராமேதி
#சுலோகத்தை




 வீடுகளில் சொன்னால்
100 விஷ்ணு சகஸ்ரநாமம்
சொன்ன பலன் .

வில்வ மரத்தடியில் சொன்னால்1000 தடவை சொன்ன பலன் .

பசு நிறைந்து இருக்கும் இடத்தில் சொன்னால் பலகோடி முறை சொன்ன பலன் .

ஆலயங்களில் சொன்னால் மறு பிறவி இல்லாது நம் சந்ததிகள் எல்லா நன்மைகளும் அடைவார்கள் என்று காஞ்சி மகாபெரியவர் சொன்ன அருள் வாக்கு.

இதை பலருக்கு பகிருங்கள். எல்லோரும் நன்மை அடையட்டும்.

லோகா சமஸ்தா சுகினோ பவந்து

“ஸ்ரீ ராம ராம ராமேதி
 ரமே ராமே மனோ ரமே
 சஹஸ்ர நாம தத்துல்யம்
 ராம நாம வரானனே”

ஸ்ரீ ராம ஜெயம் !!!

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செ...