Tuesday, February 8, 2022
Thursday, August 26, 2021
"லங்கணம் பரம ஔஷதம்" "டாக்டர் கொடுத்தது ஔஷதம். நான் பரம ஔஷதத்தில் இருக்கேன்!"என்று லங்கணத்துக்கு விளக்கம் சொன்ன பெரியவாள். காஞ்சி மகாபெரியவா அற்புதங்கள், Periyavacharanam
"லங்கணம் பரம ஔஷதம்" "டாக்டர் கொடுத்தது ஔஷதம். நான் பரம ஔஷதத்தில் இருக்கேன்!"என்று லங்கணத்துக்கு விளக்கம் சொன்ன பெரியவாள்.
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன்
நதியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்தார்கள் பெரியவா.
கடுமையான காய்ச்சல் வந்து விட்டது. உடம்பில் அனல் பறந்தது. டாக்டர் வந்து பார்த்தார்.
மாத்திரை கொடுத்து, "உடனே பால் சாப்பிட்டு விட்டு, மாத்திரைகளை போட்டுக் கொள்ள வேண்டும்" என்றார்.
அன்றைய தினம், ஏகாதசி, சுத்த உபவாசம்,தண்ணீர் கூடப் பருகுவதில்லை என்னும் போது பாலைச் சாப்பிடலாமா? "இன்னிக்குப் பாலும் வேண்டாம்...மாத்திரையும் வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்கள் பெரியவாள்
ஏஜெண்ட் மானேஜர் வந்து கெஞ்சினார். "ஜுரம் அடிக்கும்போது விரதம் - உபவாஸம் இல்லாவிட்டால் தோஷமில்லை" என்று வாதிட்டுப் பார்த்தார்.
இது ஔஷதம் செய்தார். தானே? ஆகாரம் இல்லையே?" என்று அஸ்திரப் பிரயோகம் பெரியவா
அருகிலிருந்த சிஷ்யனிடம், "டாக்டர் கொடுத்தது ஔஷதம். நான் பரம ஔஷதத்தில் இருக்கேன்!"என்று மெல்லிய குரலில் தட்டுத் தடுமாறிக் கூறினார்.
மானேஜருக்குப் புரியவில்லை. என்று கூறிப் புரியவைத்தார்கள் பெரியவாள். "லங்கணம் பரம ஔஷதம்னு சொல்லியிருக்கே!"
மறுநாள் பொழுது விடிகிற வேளை.பெரியவா வழக்கம்போல் எழுந்து,பச்சைத் தண்ணீரில் ஸ்நானம் செய்துவிட்டு அனுஷ்டானங்கள்,பூஜைகளைச் செவ்வனே செய்தார்கள்.
காய்ச்சல் வந்த வேகத்திலேயே
காணாமல் போய்விட்டது. உடம்பு,பெரியவா சங்கற்பப்படி இயங்கியது என்பதை
நிரூபிக்க ஆயிரத்தெட்டு சான்றுகளைக் கூறலாம்.
மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா
மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செ...
-
Sri Maha Periyava Charanam Experiences with Maha Periyava: Do Snanam Ten Feet Away! This happened in the year 1988. I was emp...