Wednesday, July 1, 2020

பெரியவா வார்த்தை மதிக்கணும் #mahan #periyava #periva

🕉️   பெரியவா வார்த்தை மதிக்கணும்
                                                                                                                                                                                                      
 அவர் காலத்தில்  காஞ்சி மஹா பெரிய வாளை  தரிசிக்காதவர்களே கிடையாது.   சபரிமலை ஐயப்ப  பக்தர்கள் ரெண்டு பஸ் நிறைய வந்து, ஒரு தடவை தரிசித்தபோது அவர்

''இது வரை எங்கெல்லாம் போனீர்கள்? இன்னும் எங்கெல்லாம் போகணும்?

''நிறைய இடம்  போய் தரிசனம் பண்ணோம்  பெரியவா.  இனிமே  வைக்கம், குருவாயூர், சோட்டாணிக்கரா போகப் போறோம்''

''ஓஹோ.  போறவழியிலே, திருச்சி மலைக்கோட்டை  மாத்ருபூதேஸ்வரர், திருவானைக்கா அகிலாண் டேஸ்வரி, , ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் முருகன், நெல்லையப்பர், குற்றால நாதர் எல்லாரையும் தரிசியுங்கோ ''

பஸ் ரெண்டுலே  ஒரு பஸ்  பெரியவா சொன்ன இடம் எல்லாம் போய்  ஜாக்கிரதையா திரும்பியது.   பத்து நாள் கழித்து சேதி வந்தது. 

'அங்கெல்லாம் வேண்டாம்  நேராக  பிளான் படி  சபரிமலை தான் போவோம் '' என்றவர்கள் இன்னொரு பஸ்ஸில்  புறப்பட்டு வழியில் விபத்து.   பல பேருக்கு கைகால் முறிவு. 
ஜாக்ரதையாக வந்த ஐயப்ப பக்தர்கள் காஞ்சி பெரியவா முன்பு  ஐயப்ப கோஷம் பலத்த ஒலியோடு முழக்க  சரண கோஷம் முழுதும் கண்களை மூடி ஆத்ம த்யானத்தில் இருந்தவாறு செவிமடுத்து  அவர்களுக்கு  பிரசாதங்கள் கொடுத்து அனுப்பினார்.

இன்னொரு சம்பவம்.  ஒரு பெரிய பஸ் நிறைய கர்நாடக புனித பயணம்  சென்னை பக்தர்கள்  காஞ்சியில் பெரியவா தரிசனத்துக்கு பிறகு  நேராக கர்நாடகா செல்ல அவர் ஆசி பெற சென்றார்கள். கை  உயர்த்தி அவர்களை ஆசிர்வதித்து, 

''பெரிய கூட்டமா வந்திருக்கிறீர்களே. என்ன விஷயம்?'

'''கர்நாடக புனித யாத்திரை.  முன்னாலே  பெரியவா தரிசனம் பெற வந்தோம் ''

''''கர்நாடகாவில் எங்கே முதல் தரிசனம்?'''

''மங்களூர் போய்,  அப்புறம் தலைகாவேரி ஸ்னானம், சுப்ரமண்யா, தர்மசாலா, உடுப்பி, கொல்லூர் மூகாம்பிகை, சிருங்கேரி   கடீல் துர்கா பரமேஸ்வரி, ... இப்படி பிளான் ''

''''இருங்கோ.... உங்க லிஸ்ட்லே ஒரு முக்கியமான  இடத்தை உட்டுட்டேளே ...  '''';
எல்லோரும் விழித்தார்கள்.  பெரியவாளே  தொடர்ந்தார்.
''ஹொரநாடு க்ஷேத்ரா..  அம்பாள் அங்கே அன்னபூரணி. .  நாள் சொல்றபடி செய்யுங்கோ.  மங்களூரிலே இருந்து சிருங்கேரி,துங்கா ஸ்னானம். அப்புறம்   அங்கே சிருங்கேரி குரு தர்சனம், அவர் ஆசியோடு சாரதாம்பாளை தரிசித்துட்டு அப்புறமா  மீதி இடம் எல்லாம் போங்கோ.''

பெங்களு ரிலிருந்து மங்களூர் போய், ஒரு கல்யாண மண்டபத்தில்  தங்கி, மறுநாள் காலை புறப்படும் நேரம் ஒருவர்   '' டைம் சேவ்  பண்ணனும்.  திட்டமிட்டபடி  முதலில் தலைகாவேரி போவோம். ஸ்னானத்துக்கு அப்புறம்  மீதி இடம்  சிருங்கேரி எல்லாம்  போவோமே?'' என்கிறார்.  மற்றவர்களும் சரி என்றதால்,  பஸ் தலைகாவேரி சென்றது.  அங்கிருந்து இரவு  8 மணிக்கு  சிருங்கேரி பயணம்.   இரவு  மலைப்பாதை. பாதி வழியில்  பஸ் டயர்கள் ''புஸ்''  என்ன செய்வது. மழை வேறு?  பசி.  ஒருவழியாக இரவு 10 மணிக்கு மாற்று சக்கரங்கள் பொருத்தி கிளம்பினார்கள்.   இரவு  11 மணி ஆகியும்  சிருங்கேரி வரவில்லையே? என்ன ஆயிற்று. வழி தப்பிவிட்டதா  பஸ்?
வழியில் ஒருவர்  தென்பட்டார்.  பஸ்ஸை நிறுத்தி அவரை வழி கேட்டார்கள். 

''அடடே,  16 கி.மீ. தூரம் முன்பே  வலது பக்க  சாலையில் அல்லவோ திரும்பி இருக்க வேண்டும்.? தப்பாக வந்து விட்டீர்களே. இப்படி போனால் சிருங்கேரி வராது.  அந்த   குறுகிய  மலைப்பாதையில் பஸ்  எப்படி திருப்புவது. டிரைவர் இறங்கி  பார்த்தார். 
'
''கவலைப்படாதீங்க. மெதுவா  கொஞ்சம் கொஞ்சமா பஸ்ஸை  REVERSELE
 பின்பக்கமாகவே  பிரேக் பிடிச்சு பிடிச்சு  வந்த வழியே   ஓட்டறேன்.  வண்டியை திருப்ப  இடம் இல்லே. நிறைய  வளைவுகள்.  உள்ளே  எல்லோரும்  ராமநாமம் பிரார்த்தனை பண்ணினார்கள்.  திடீரென்று  ட்ரைவர் உரக்க.....
''ஐயா  நான்  எவ்வளவு அழுத்தி பிரேக் போட்டாலும் வண்டி நிக்கமாட்டேங்குதுங்க.  'வண்டி தானாகவே மேட்டிலிருந்து கீழே இறங்குதுங்க...''.

''சிருங்கேரி சாரதாம்பா தாயே  காப்பாத்து மா.   மஹா ஸந்நிதானம் , காஞ்சி பரமாச்சார்யா  ப்ரபோ  காப்பாத்துங்கோ''  பக்தர்கள்  பராதீனமாக வேண்டினார்கள்.

சில வினாடிகளில் வண்டி நின்றது.  ''பிரேக் வேலை செய்யுதுங்க''  நள்ளிரவு  12 மணி. 

 விடிகாலை    2மணி வாக்கில் சிருங்கேரி மடத்தின் வாசலில் வண்டி நின்றபோது ஒரு கனபாடிகள் நின்று வரவேற்றார்.

''மெட்றாஸ் காராளா ? இறங்கி கைகால் அலம்பிண்டு  வாங்கோ . சாப்பிடுங்கோ.  பசியா இருப்பேள் . சூடா  அரிசி உப்புமா  கத்திரிக்கா  கறி  உங்களுக்கு  ரெடி பண்ணிருக்கு''.
''சுவாமி  ஆச்சர்யம்.  நாங்க  வரோம்னு  எப்படி தெரிஞ்சுது. லெட்டர் கூட போடலியே?
''மஹா சந்நிதானத்துக்கு எல்லாம் தெரியும்.  என்னை ராத்திரி 11 மணிக்கு கூப்பிட்டனுப் பினார். ஒரு பஸ் நிறைய  50-55 பக்தா  மெட்ராஸ்லேருந்து  நல்ல பசியோடு வருவா.  உள்ளே போய்  அரிசி உப்புமா  பண்ண சொல்லு. வாசல்லே  நில்லு வந்தா அழைச்சுண்டு வா '' 
அப்போ  மஹா சன்னிதானம்   ஸ்ரீ   ஸ்ரீ  அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள்.

பஸ் பிரயாணிகள் அதிர்ந்து போய் நின்றபோது அந்த கனபாடிகள் இன்னொரு குண்டு வீசினார்.

  ''இதுக்கே இப்படி அதிசயப்படறேளே. நாளை காலம்பற ஒரு விஷயம் சொன்னா எப்படி எடுத்துப்பேளோ ? 

ட்ரைவரோடு  54  வாழை இலைகளில் மேலே மேலே போடப்பட்ட   சுட சுட  இருந்த  அரிசி உப்புமா  காலியாயிற்று.

காலையில்  துங்கா தீர ஸ்னானம். எல்லோரும் மஹா சந்நிதானத்தின்  தரிசனத்துக்கு காத்திருந்தபோது  அந்த கனபாடிகள்   வந்தார்
.
'' காலையில் இன்னொரு விஷயம் சொல்வதாக   சொன்னீர்களே அது என்ன ?

''ஒண்ணுமில்லே.  நேத்து ராத்திரி பன்னெண்டு மணிக்கு   மஹா சன்னிதானம்  அவருடை அறையிலே ஏதோ சாஸ்த்ர  புஸ்தகம் படிச்சிண்டு இருந்தார்.  நான்  வெளியே  ஹாலில் உட்கார்ந்துண்டு இருந்தேன். மஹா சன்னிதானம் திடீர்ன்னு எழுந்து ரெண்டு கையையும் செவுத்து மேலே வச்சு  அழுத்தி தள்ளி ஏதோ மந்திரம் சொன்னதை பார்த்தேன்.  அவர் செய்யறதை பார்த்தா சுவர் கீழே விழாம  தடுக்கிற மாதிரி தோணித்து.

ஐந்து ஆறு நிமிஷம் கழிஞ்சு அப்புறம் மஹா ஸந்நிதானம்  பெரியவா என்கிட்டே வந்தா





''என்ன பண்ணேன்னு  பாக்கிறியா.   சாரதாம்பாளை தரிசிக்க வந்துண்டு இருக்கிற மெட்ராஸ் பக்தர்கள்  பஸ் வழி தவறிடுத்து.  மலை பள்ளத்தில் சரியப் போறது. பிரேக் பிடிக்கல.   அம்பாளையும்  என்னையும்  கூப்பிடறா.  அம்பாளை வேண்டிண்டு  நான்  பஸ்  பள்ளத்தில் சரியாம பிடிச்சுண்டு  பிரார்த்தனை பண்ணேன். ஒருவழியா பஸ் பிரேக் வேலை செஞ்சப்பிறம் கையை
  விட்டேன்.'''

இதைக் கேட்ட பிரயாணிகள் நடுங்கினர்.   மஹா சன்னிதானம் தரிசனம் கொடுத்தார். சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்கள்.   பஸ் பிரயாணிகள் தலைவரிடம்   ''பெரியவா சொன்னா  கேக்கணும் '' காரணமாக தான் சொல்வா ன்னு புரியணும்''  என்கிறார்.மஹா சன்னிதானம் உச்சரித்த  மந்திரம்  மஹா ம்ருத்யுஞ்சய ஜெப  மந்திரம் .                                                                            🕉️🙏🕉️

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செ...