Wednesday, July 1, 2020

ஶ்ரீகாஞ்சி மஹாப் பெரியவா வாக்கு

கலி அதர்மத்திற்கே சங்கல்பிக்கப்பட்டதா.

ஶ்ரீகாஞ்சி மஹாப் பெரியவா வாக்கு.

ஆதாரம்:
தெய்வத்தின் குரல்.
பாகம்---5.
பக்கம்----345 to 350.




பகவத் சங்கல்பம் நமக்குப் புரியாது.
என்றாலும், அவன் (பகவான்) சஸ்திர வாயிலாகக் "கலி அதர்ம யுகம்" என்று நமக்குத் தெரிவிக்கும்போது, அப்படியே அதர்மத்தில் லோகம் நசித்துப் போவதற்காகத்தான் இந்த யுகம் அவனால் தீர்மானமாகப் சங்கல்பட்டு இருக்கிறதென்று அர்த்தம் கொண்டு விடக்கூடாது என்றே தோன்றுகிறது.
சறுக்காமாலை விளையாட்டுப் போலச் சறுக்கும் வரை சறுக்கட்டும் என்று பார்த்துக் கொண்டு இருந்தாலும், விழுந்து எலும்பை முறித்துக் கொள்ள விடாமல் தாங்கிக் கொள்ள வருவான்;
மஹான்களையும் அனுப்பி வைப்பான்.

ஒரு பக்கம் லஞ்சம், மோசடி, கொலை இன்னும் அநேக தகாத கார்யங்களுக்கான க்ளப்புகள், சூதாட்டங்கள் என்று இப்போது ஒரு பக்கம் பார்க்கிறோம் என்றால், இன்னொரு பக்கம் ப்ரவசனம், பஜனை, கும்பாபிஷேகம் என்றும் நிறையப் பார்க்கிறோம் அல்லவா?

கலி முடிகிறபோது கூட நல்ல வைதிகமான தர்ம வாழ்வு நடத்துபவர்கள் அடியோடு அஸ்தமித்து விடப் போவதில்லை.

கலியுக முடிவில் தாம்ரபரணி தீரத்தில், அதாவது நம்முடைய திருநெல்வேலி ஜில்லாவில், விஷ்ணுயசஸ் என்ற பிராமணருக்குப் புத்திரனாகப் "கல்கி" என்ற பெயரில் பகவான் அவதரிப்பான் என்று சொல்லி இருக்கிறது.
அப்படியானால், அப்போதும் வைதிக ஆசாரங்களைப் பின்பற்றும் ஸத்பிராமணர்கள் கொஞ்சமாவது இருந்து கொண்டு இருப்பார்கள் என்றுதானே அர்த்தம்?

கலியின் கொடுமையைப் புராணம் முதலானவற்றில் ஜாஸ்திப் படுத்தித்தான் சொல்லி இருக்கிறது.
போயே போய் விட்ட மாதிரிதான் வர்ணித்து இருக்கும்.

அக்னிஹோத்ரம் என்பது கர்மகாண்டத்தில் ப்ரவிருத்தி மார்க்கத்தில் வருவது;
ஸந்யாஸம் என்பது ஞானகாண்டத்தில் நிவ்ருத்தி மார்க்கமாக வருவது.
எனவே இந்த இரண்டும் போய்விட்டால் ஜனங்கள் உருப்பட வழியே இல்லை.
அதற்கு தர்ம சாஸ்திரக்காரர்கள் என்ன தீர்ப்புக் கொடுத்தார்கள்?

"கலியுகம், க்ருதயுகம் என்று போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
எதுவரை வர்ண விபாகம் கொஞ்சமாவது இருக்கிறதோ, அதுவரை அக்னிஹோத்ரமும் ஸந்யாஸமும் இருக்கலாம்"
என்று தீர்ப்புக் கொடுத்தார்கள்.

அதனால், கலியிலும் இவையெல்லாம் மங்கிப் போனாலும், முழுக்க அணைந்து விடாமல் முணுக்கு முணுக்கு என்று எரிந்து கொண்டுதான் இருக்கும் என்று தெரிகிறது அல்லவா?

அணைந்து போகிற நிலைக்கு வரும்போது ஒரு மஹாபுருஷர் வந்து எண்ணெய் போட்டு, திரியைத் தூண்டிவிட்டு நன்றாகவே ஜொலிக்கச் செய்வார்.

க்ருதயுகமே வந்து விட்டதோ என்று நினைக்கிற மாதிரிகூடக் கொஞ்ச காலம் நன்றாகப் போகும்.
அப்புறம் மறுபடி மங்கல்,
மறுபடித் தூண்டி விடுவது என்று போய்க் கொண்டிருக்கும்.

"கலிதான் அதர்மயுகம் என்றால், நாம் அதர்மமாகத்தான் இருந்துவிட்டுப் போவோமே"!
என்று சொல்வது தப்பு.

"கலி அதர்ம ஆட்சியை ஆரம்பித்து விட்டான்"
என்று சாஸ்திரங்கள் தண்டோராப் போடுவதற்குத் தாத்பர்யம், கூடியமட்டும் தர்மத்தை ஜாக்ரதையாக ரக்ஷித்துக் கொள்வதற்குத்தோனே ஒழிய, இருப்பதையும் விட்டுவிட்டு வீணாகப் போவதற்கு இல்லை.

இந்த யுகத்தில் வரும் அதர்மப் பிரவாஹத்தை ஒருவன் எதிர்த்து நின்றால்தான், மற்ற யுகங்களில் செய்யும் தர்மானுஷ்டான பலனைவிடக் கோடி மடங்கு பலன் பெறலாம்.

க்ருதயுகத்தில் மனோநிக்ரஹம் என்ற சிரம ஸாத்யமான கார்யத்துடன் கூடியதான "தியானம்" செய்தும், த்ரேதாயுகத்தில் கஷ்டப்படுத்திக் கொண்டு "யாகங்கள்" செய்தும், த்வாபரயுகத்தில் விஸ்தாரமாக "அர்ச்சனை, பூஜை" என்று செய்துமே பெறக்கூடிய பலனை, இந்தக் கலியுகத்தில் சுலபமாக "பகவந்நாமா"வைச் சொல்லியே பெற்று விடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
பயமுறுத்திய அதே சாஸ்திரங்களிலேயே ரொம்பவும்  ஆறுதலாகச் சொல்லி இருக்கிறார்கள்.

"கலியா அஸத்தான யுகம்".

அதுதான் ஸத்தான யுகம்.

"கலி: ஸாது:,
கலி: ஸாது:"
என்று வியாஸாசார்யாள் இரண்டு தரம் உறுதிப்படுத்திச் சொல்லி இருக்கிறார்.

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - இதுக்கு மேல என்ன பதவி இருக்கு?

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - இதுக்கு மேல என்ன பதவி இருக்கு?

ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள உத்திரகோசமங்கை ஸ்ரீமங்களநாதர் கோயிலுக்குச் சென்றபோது, அங்கு அன்பர் ஒருவரை சந்தித்தேன். அப்போது தன்னுடைய தந்தைக்கு, காஞ்சிப் பெரியவர் அருளிய… நெகிழ வைக்கும் சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அன்பரின் தந்தை, சென்னை நீதிமன்றத்தில் கிளார்க்காகப் பணிபுரிந்து வந்தவர். அப்போது காஞ்சிப் பெரியவர், சென்னை நகரில் முகாமிட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் அன்பரின் தந்தையும் பங்கேற்று சேவை புரிந்தாராம். அன்பரின் தந்தை ஓடியாடி உழைத்த விதத்தை காஞ்சி பெரியவாள் நேரில் கண்டார்.



முகாம் நிறைவுறும் நாள் வந்தது. அன்றைய தினம், அன்பரின் தந்தையைக் கரிசனத்துடன் அழைத்த பெரியவாள், ”எங்கே வேலை பாக்கறே?” என்று கேட்டிருக்கிறார்.

”கோர்ட்ல கிளார்க்கா வேலை பாத்துண்டிருக்கேன்” என்று பவ்யமாக பதில் அளித்தாராம் அன்பரின் தந்தை.

உடனே பெரியவாள், ”இதுக்கு மேல என்ன பதவி இருக்கு?” என்று கேட்க… ”ஷெராஸ்தார்” என்று பதிலளித்திருக்கிறார் இவர்.

இதையடுத்து பெரியவாள், ”நீ ஷெராஸ்தார் ஆயிடுவே” என்று ஆசீர்வதித்திருக்கிறார்.

சாதாரண கிளார்க் உத்தியோகத்தில் இருந்து ஷெராஸ்தார் பொறுப்புக்கு வருவதற்குக் கல்வி உள்ளிட்ட தகுதிகள் அவசியம். ஆனால் இந்த அன்பரின் தந்தைக்குக் கல்வித் தகுதி மட்டும் இல்லை. எனவே, ‘இந்தப் பதவி சாத்தியமே இல்லை’ என்று தீர்மானித்து, காஞ்சிப் பெரியவாளின் ஆசியை அடுத்த கணத்தில் இருந்து மறந்தே போனார்.

இதையடுத்து ஒரு சில நாட்களில் டெல்லியில் இருந்து தலைமை நீதிபதி சென்னைக்கு வந்துள்ளார். அவருக்குத் தேவையான பணிவிடைகளை சிறப்பாகச் செய்து கொடுத்தாராம் அன்பரின் தந்தை.

சில நாட்கள் கழித்து, வேலை முடிந்து தலைமை நீதிபதி டெல்லிக்குக் கிளம்பிச் செல்லும்போது, நீதிமன்ற அலுவலகக் குறிப்பேட்டில், ‘இந்த கிளார்க்கின் பணி பாராட்டுக்குரியது. அடுத்த பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர் இவர்’ என்று பரிந்துரை செய்திருந்தாராம்!

பிறகென்ன? உரிய நேரத்தில் அந்தப் பரிந்துரை உயரதிகாரிகளால் கவனிக்கப்பட்டு, அன்பரின் தந்தைக்கு ஷெராஸ்தார் எனும் பதவி உயர்வு கிடைத்ததாம்.

சில வருடங்களுக்குப் பின், காஞ்சிப் பெரியவர் மீண்டும் சென்னை வர… அன்பரின் தந்தை அந்த முகாமுக்குச் சென்று பெரியவாளை தரிசித்து வணங்கியிருக்கிறார்.

”என்ன… ஷெராஸ்தாரர் ஆயாச்சா?” என்று மெள்ள புன்னகைத்தபடியே பெரியவாள் கேட்டதும், அந்த நடமாடும் தெய்வத்தின் தீர்க்க தரிசனத்தை எண்ணி வியந்து போனாராம் அன்பரின் தந்தை!

பெரியவா சரணம்!

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செ...