குருவும் சிஷ்யரும் என்ற தலைப்பில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தன் குருவை பற்றி கூறியதை இங்கே பதிவிடுகிறேன்
பெரியவா இச்சா சக்தி நான் கிரியா சக்தி
விழுப்புரத
்தில்
படித்து கொண்டு இருந்தேன். என்னோட அப்பா ரயில்வே உத்தியோகம் பார்த்து
கொண்டு இருந்தார்.குடுமி வெச்சு இருப்பார். வைதீக விஷயங்களில் பலது
அவருக்கு அத்துப்படி. நான் நாலாவது படிச்சிண்டு இருந்ததா ஞாபகம். எனக்கு
பூணூல் போட்டு விட்டா. அப்ப எங்க ஊருக்கு ஒரு தடவை பரமாச்சாரியார் வந்து
இருந்தார். ஊரே திரண்டு போய் அவரை தரிசனம் பண்ணிட்டு வந்தது. எங்க அப்பா
அம்மாவும் என்னை கூட்டி கொண்டு போய் இருந்தார்கள்.
ஆசீர்வாதம் வாங்கறதுக்காக பெரியவா கால்ல எங்கப்பா விழுந்து நமஸ்காரம்
செய்தார். என்னை பார்த்து லேசாக சிரிச்சு ஆசீர்வாதம் பண்ணார் பெரியவா. உம்
புள்ளையா கூட்டி கொண்டு ஒரு தடவை காஞ்சிபுரம் வாயேன். என்று அப்பாவிடம்
பெரியவர் கூறினார். அப்பாவுக்கு தாங்க முடியாத சந்தோஷம். இவரை பார்த்து
தரிசனம் பண்ண முடியாதா இவர் கையால் ஆசீர்வாதம் வாங்க முடியாதா? என்று
பலரும் ஏங்கி தவிக்கிற போது நம்ம கிட்ட இப்படி ஒரு கோரிக்கையை வெச்சுட்டாரே
என்று சந்தோஷம். கட்டாயம் வர்றேன் என்று சொன்னார். எனக்கும் ஆவல் தாங்க
முடியவில்லை . எப்போது காஞ்சிபுரம் போவோம் என்று நச்சரிக்க ஆரம்பித்தேன்.
அந்த நாளும் வந்தது. குடும்பத்தோட நாங்க காஞ்சிபுரம் போனோம். வந்து
விட்டாயா இங்கேயே என்று பெரியவர் என்னை பார்த்து கேட்டார். அதுக்கான
அர்த்தம் அப்போது தெரியவில்லை பின்னர் தான் புரிந்தது. நிரந்தரமாக இங்கேயே
வந்து விட்டாயா என்று கேட்டார் என்று லேட்டாகத்தான் எனக்கு புரிந்தது.
பிறகு என்னை அருகே அழைத்த பெரியவா ஏம்ப்பா சுப்பிரமணியா எனக்கு அடுத்து
மடத்தோட பொறுப்புக்களை நீயே கவனித்து கொள்கிறாயா என்று கேட்டார் . எனக்கு
அப்போது சின்ன வயது பெரியவர் என்ன கேட்கிறார் என்ன சொல்ல வேண்டும் என்று
புரியவில்லை. என்னுடைய இயல்பான மன நிலை யை பார்த்து மனதுக்குள் சிரித்த
பெரியவா என்ன சொல்றேள் என்று என்னோட அப்பாவை பார்த்தார்.
பெரியவா
வாயில் இருந்து பெரிய வார்த்தைகள் வந்து விழுந்து இருக்கிறது. இதுக்கு நான்
என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. என்று தயக்கத்தோடவும் மிகுந்த
மரியாதையுடன் சொன்னார். இப்பவே பதில் சொல்லணும் என்கிற அவசியம் இல்லை.
கிணத்துக்குள்ளே வாளிய விட்டா உடனேயேவா ஜலம் வந்து விடுகிறது. தாம்பு
கயித்தால வாளிய பக்குவமா தண்ணீருக்குள் விட்டு ரொம்பி விட்டதா என்று
தெரிந்த பின்னர் தானே மேலே இழுக்கிறோம். அப்புறம் தானே ஜலம் நம்ம கைக்கு
கிடைக்கிறது. ஒரு நாலைந்து மாதம் எடுத்து கொள்ளுங்கள்
பின்னர் தானே
ஒரு நாள் கூப்பிட்டு விடுகிறேன்.என்ன பதிலாக இருந்தாலும் அப்ப சொன்னால்
போதும். இப்ப நீங்க ஜாக்கிரதையாக விழுப்புரம் பொறப்படுங்கள் என்று அனுப்பி
வைத்தார்.
பெரியவா சொல்லி மாதிரியே நாலஞ்சு மாசம் போயிருக்கும்.
எங்களை காஞ்சிபுரம் கூப்பிடுவதாக பெரியவா கிட்டே இருந்து தகவல் வந்தது.
கிளம்பினோம்.
இப்ப என்னோட அப்பா தெளிவாக இருந்தார் . அதே
புன்னகையுடன் பெரியவா என்னை பார்த்தார். என்ன மடத்துல சேர்த்து விடுகிறாயா
என்கிற மாதிரி.. என்னுடைய அப்பா தான் ஆரம்பித்தார். பெரியவா வாக்கை
தட்டப்படாது என் பையன் சுப்பிரமணியனோட எதிர் காலம் இது தான் என்று உங்க
வாயில் இருந்தே வந்து விழுந்து விட்டது. என் பையனை மடத்துக்கு அனுப்பறதா
மனப்பூர்வமாக நான் முடிவு பண்ணிட்டேன்.
ஒரு வினாடி பெரியவா கண் மூடி
எதையோ யோசிச்சார் . பின் பக்கம் திருப்பி பார்த்தார். மடத்தோட காரியதரிசி
ஒருத்தர் பவ்யமாக வந்து நின்னார் . இந்த பையன் வேதம் படிக்கணும். இங்கிலீஷ்
நன்னா கத்துக்கணும். திருவிடைமருதூர் பாடசாலைக்கு இவனை பத்திரிமாக
அனுப்புங்கள். என்றார்.
அதன் பின்னர் பல ஊர்களுக்கும் போய் வேதம்
சம்பந்தமான பல படிப்புக்களை படிச்சேன். இங்கிலீஷ் நன்னா கத்துண்டேன் . படம்
சம்பந்தமான சில முக்கிய காரியதரிசிகள் அப்பப்ப என் கிடடே அன்பா
விசாரிப்பார்கள்.
என்னௌட 17வது வயதில் நான் திருவானைக்காவல் இருந்தேன்.
அப்ப பெரியவா இந்திய தேசம் முழுவதும் ஒரு யாத்திரை போயி இருந்தார்.
திருப்பதி, காசி, மதுரா என்று பல ஷேத்திரங்கள் போயிட்டு காஞ்சீபுரத்துக்கு
திரும்பி இருந்தார். என்னையும் காஞ்சிபுரத்துக்கு வரச் சொல்லி
திருவானைக்காவல் கோவிலுக்கு ஒரு தகவல் வந்தது.
மடத்துக்கு நான்
வந்ததும் அங்கிருந்த பல முக்கியஸ்தர்கள் இவர் தான் அடுத்த சங்கராச்சாரியார்
என்று தங்களுக்குள் பேசிக் கொண்டது எனக்கு அரசல் புரசலாக தெரிஞ்சது. அது
ஜய வருடம் சுப்ரமண்யன் ஆன நான் அன்று முதல் ஜெயேந்திரர் என பெரியவாளால்
புதிய நாமகரணம் சூட்டப்பட்டேன் .
காஞ்சி மடத்தில் உள்ள மண்டபத்தில்
இளைய சங்கராச்சாரியார் ஆக பதவி ஏற்றுக் கொண்டேன். காவி துணியும் தண்டமுமா
முழு துறவி ஆனேன். அன்று மடத்துக்கு வந்து இருந்த பக்தர்கள் பல பேருக்கு
என்கிட்ட பிரசாதம் ஆசி வாங்கறதுக்காக விழுந்து நமஸ்கரித்தார்கள் இறை
தொண்டில் கிடைக்க கூடிய பிரியமே அலாதி.
அதன் பிறகு பெரியவா என்னை கூப்பிட்டு என்னெவெல்லாம் நான் செய்ய வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தார்.
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் நாட்டில் இந்து மதம்
தழைத்து ஒங்க வேண்டும்.கோயில்களில் பூஜைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் உதவி
என்று கேட்டு வரும் எவரையும் நாம் ஒதுக்க கூடாது. கல்வி சாலைகள் வளர்க்க
வேண்டும் தர்மம் நிலைப்பெற செய்ய வேண்டும். இதற்கு எல்லாம் யாத்திரைகள்
சென்று மடத்துக்கு வருமானம் பெருக்க வேண்டும். இப்படி பல விஷயங்கள்
சொன்னார்.
பெரியவா வாக்குப்படி முதல் யாத்திரையாக குஜராத்துக்கு
அனுப்ப பட்டேன். அங்கு அஹமதாபாத்தில் தங்கினேன். அப்பொழுது வேத விஷயங்களில்
பிரபலமாக இருந்த ஒரு மஹாராஜாவை வரவழைத்து உபன்யாசத்துக்கு ஏற்பாடு
செய்தேன். இதுக்காக ஒரு இடத்தில் பிரமாண்டமாக பந்தல் போடப்பட்டது.நாலஞ்சு
நாட்கள் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி நடந்தது. நல்ல விளம்பரம் செய்து கூட்டம்
கூட்டினேன் . இப்படி தடபுடலாக நடந்தது அந்த நிகழ்ச்சி.
அப்போ
அஹமதாபாத் நகர் முழுவதும் இதே பேச்சாகத்தான் இருந்தது. காஞ்சிபுரத்துலே
இருந்து இளைய சங்கராச்சாரியார் முதன் முறையாக குஜராத்துக்கு வந்து
இருக்கார்.ஏதோ உபன்யாசமாம் வா போகலாம். என்று ஒரே பேச்சாக ஆகி விட்டது.
இந்த நிகழ்ச்சி மூலமாக சுமார் பத்து லட்சம் ரூபாய் வசூலாகியது மடத்துக்கு
பொருள் சேர்க்க வேண்டும் என்று நினைத்து நான் ஏற்பாடு செஞ்ச இந்த முதல்
நிகழ்ச்சியே பிரமாதமாக அமைந்தது.
இந்த பணத்தை அப்படியே கொண்டு போய்
பெரியவாளிடம் தர வேண்டும் என்று நான் புறப்பட்டேன் மஹாராஷ்டிராவுக்கு
அப்போ சதாரா என்கிற ஊரில் பெரியவா முகாம் இட்டு இருந்தார்.சத்ரபதி சிவாஜி
பிறந்த ஊர் அது. பெரியவாளை சந்திச்சு விஷயம் சொல்லி பணத்தை கொடுத்தேன்.
பணத்தை பெரியவா தொட மாட்டார். அப்படி அந்த ஸ்வாமி முன்னால் வை என்று எனக்கு
உத்திரவு இட்டு சதாராவில் நடராஜ பெருமானுக்கு கோயில் அமைக்கும் பணிக்கு
இதை அப்படியே பயன் படுத்தி கொள்ளுமாறு உத்தரவு இட்டார்
ஆறு மாசம்
அங்கேயே நான் தங்கி கோயில் கட்டும் முயற்சியில் இறங்கினேன். அது 1980
வருடம் இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். கோயிலுக்கு மொத்தம் நாலு
கோபுரம் கட்ட வேண்டும். அப்போ கேரள முதலமைச்சர் ஆக இருந்த கருணாகரனிடம்
நடராஜர் கோயிலுக்கு மரங்கள் சப்ளை செய்யுங்கள் என்று விண்ணப்பம்
அனுப்பினோம். கேட்டப்படியே வந்தது. இதே மாதிரி அப்போது தமிழக முதல்வர் ஆக
இருந்த எம்.ஜி.ஆர் அரசும் இந்த கோயில் கட்டுவதற்காக பல உதவிகள்
செய்தார்கள்.
1986 வருடம் பெரியவா முன்னிலையில் கும்பாபிஷேகம் கோலாகலமாக
நடந்தது. அங்கேயே உட்கார்ந்தா வேலை ஆகுமா எனக்கு? அடுத்து அடுத்து யாத்திரை
புறப்பட்டேன். இப்படி இந்திய தேசம் முழுவதும் சுற்றி கொண்டே இருந்தேன்.
அப்ப காஞ்சி மடத்துக்கும் கர்னாடகாவில் இருந்த சிருங்கேரி மடத்துக்கும் பல
அபிப்பிராய பேதங்கள் இருந்து வந்தன இப்ப இருக்கிற நம்ம வாஜ்பாய் முஷரப்
போல் ( சிரிக்கிறார்)
எத்தனையோ சமாதான முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டும் எதுவும் சரியா வரலை. பெரியவா என்னை
கூப்பிட்டார்.என்னோட காலத்துக்குள்ளே இந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு
வந்துடணும் மனுஷாலுக்கு உள்ள அபிப்பிராய பேதம் வரக்கூடாது. அங்கே
சாரதாம்பாளும் ஒண்ணு தான் இங்கே காமாட்சி அம்மனும் ஒண்ணு தான்.
நீ தான்
ஏதாவது முயற்சி பண்ணி சமாதானத்தை கொண்டு வரணும். என்று என்கிட்ட
சொன்னார்.அது நரசிம்ம ராவ் ஆட்சி காலம். ராம் ஜென்ம பூமி பிரச்சினை இருந்த
நேரம். இதையே ஒரு சாக்காக வெச்சுண்டு சமாதான முயற்ச்சி ஆரம்பிக்கலாமே என்று
தோன்றியது. ராம ஜென்ம பூமி பத்தி பேசுகிற சாக்கில் சிருங்கேரி மடாதிபதியை
சந்தித்து பரஸ்பரம் விசாரித்து படங்கள் சம்பந்தமான பிரச்சினையை பேசி
முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று பிளான்
இந்த விஷயத்தை நானே
முன் நின்று ஆரம்பிச்சா சரியா வராது என்று தீர்மாசனிச்சு இப்படி ஒரு
மாநாட்டை நீங்கள் கூட்டுங்களேன் என்று நரசிம்ம ராவுக்கு செய்தி
அனுப்பினேன். அவரும் தாராளமாக சம்மதித்து இதுக்கு என்று பெங்களூர்ல ஒரு
கமிட்டியை நியமிச்சார்.
இதுக்கு முன்னாடி காஞ்சி மடம் சார்பில்
ஒரு வெண் குடை தயாரிச்சு சிருங்கேரி மடத்துக்கு அனுப்பி வைப்போம் .
நாமெல்லாம் சமாதானமாக இருக்கோம் என்று அடையாளம் காட்டுவதற்காக அந்த வெண்
குடை.
ஆந்திராவில் டூரில் இருந்த எனக்கு அழைப்பு சிருங்கேரியில் இருந்து
வந்து இருப்பதாக தகவல் வந்தது. அதற்கு ஏற்பாடு செய்தேன் நான் தானே. எப்போது
அழைப்பு வரும் என்று காத்துக் கொண்டு இருந்த எனக்கு சந்தோஷம் தான்.நானும்
பால் பெரியவாளும் உடனே புறப்பட்டு சிருங்கேரி போனோம்.
இந்தியா முழுவதிலும்
இருந்து பல மடாதிபதிகள் அதில் கலந்து கொண்டனர்.
முதல் நாள்
சிருங்கேரி மடாதிபதியும் நானும் தனியா சந்தித்து பேசினோம். அப்புறம்
அம்பாள் தரிசனம். பிரசாதம் கொடுத்தா .
ரொம்பவும் இன்முகத்துடன் பேசி
திரும்பினோம். காஞ்சிபுரம் திரும்பி பெரியவாளிடம் சிருங்கேரி டிரிப் பற்றி
முழுக்க சொன்னவுடன் அவர் முகத்தில் சந்தோஷ ரேகைகள். என் காலத்துக்குள் இது
முடியுமா என்கிற அச்சம் இருந்தது. அது இப்ப போயிடுத்து. என்று
புளகாங்கிதப் பட்டார். எனக்கு எத்தனை நாள் ஆனாலும் மறக்க முடியாத சம்பவம்
இது.
அதாவது பெரியவா இச்சா சக்தி நான் கிரியா சக்தி. ஆசைப்பட்டார்.
நான் நிறைவேற்றி காண்பித்தேன். அவ்வளவு தான் மத்தப்படி எல்லாம் பகவான்
கையில் தான் இருக்கு . பேட்டியை முடித்து கொண்டு புன்னகையுடன் விடை
கொடுத்தார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.
இது 2002 விகடன் பவழ விழா மலர் இருந்து எடுக்கப்பட்டது.