Thursday, April 9, 2020

ஏ.ஜி.ஆபீஸ் வேலையில் சேர்ந்துவிடு' #mahaperiva #periyava #kanchiperiva Perivacharanam

ஏ.ஜி.ஆபீஸ் வேலையில் சேர்ந்துவிடு'
பொய் சொல்லும் தொழில்களான, வக்கீல்,ஆடிட்டர் வேலைகளை நிராகரித்த பெரியவா.
ஒரு பக்தனுக்கு அறிவுரை.
தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
சொன்னவர்-எஸ்.சீதாராமன்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நான் சட்டக்கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்றேன். மேலும் ஒரு துறையில் சிறப்புக் கல்வி பெறுவதற்காக, அதற்கான இரண்டாண்டுப் படிப்பில் சேர்ந்திருந்தேன்.

அப்போது, அக்கௌண்டண்ட் ஜெனரல் அலுவலகத்திலிருந்து, பணி நியமன உத்தரவு வந்தது. நல்ல வேலை பணியில் சேரலாம். ஆனால், சட்டத் துறையில், சிறப்புக் கல்வி பெறுவது என்பது கனவாகப் போய்விடும் !. குழப்பம்….

பக்தர்களின் குழப்பத்தைத் தீர்ப்பதற்காகத்தானே,ஒரு மகான் காஞ்சியில் காத்துக் கொண்டிருக்கிறார்!

சலோ,காஞ்சிபுரம் !

பெரியவாளிடம் என் பிரச்சினையை விவரித்தேன்.

பெரியவாளின் பதில்;

'இப்போது, இரண்டு தொழில்களில், நிறைய பொய் சொல்ல வேண்டியிருக்கு. ஒன்று,வக்கீல்; மற்றொன்று சார்ட்டர்டு அக்கௌண்டண்ட் !.

'சூரியன், உன் ஜாதகத்தில் உச்சத்தில் இருக்கிறான். அதனால், உனக்குப் பொய் சொல்ல வராது ! ஏ.ஜீ.ஆபீஸ் வேலையில் சேர்ந்துவிடு'

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சூரியன் உச்சத்தில் இருக்கிறானாமே? என் ஜாதகத்தைப் பெரியவா பார்த்ததே இல்லையே !

"பெரியவா அனுக்ரஹத்தாலே தங்க வளையலாவது தப்பிச்சுது." #periyavacharanam #mahaperiva #kanjiperiva



'பெரியவா அனுக்ரஹத்தாலே தங்க வளையலாவது தப்பிச்சுது…'

வீட்டுச் சாமான்கள் திருட்டுப் போய்விட்ட - ஏழை பிராமணர்.

பாங்க் லாக்கர்லே வைக்கச் சொன்ன பெரியவா

தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

உகார் குர்துவில் தங்கியிருந்தபோது, ஜெமினி கணேசனின் மனைவி தரிசனத்துக்கு வந்திருந்தார். அவர், பெரியவாளிடம் பேசிக்கொண்டிருந்த போது, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஓர் ஏழைப்பிராமணர் வந்து, தன் பெண்ணுடைய கல்யாணத்துக்குப் பண உதவி கோரினார்.

ஜெமினி கணேசனின் மனைவியிடம், பெரியவா; 'உன்னிடம் ஏதாவது இருந்தால் கொடேன்' என்றார்கள். உடனே அவர் தன் கையில் அணிந்திருந்த வளையல்களில், ஒரு ஜோடியைக் கழற்றிக் கொடுத்தார், மிகவும் சந்தோஷத்துடன்.

'அவரிடம் இப்போ கொடுக்காதே, கல்யாணத்துக்கு நாலு நாள் முன்னாடி கொடுத்தால் போதும்' என்று பெரியவாள், அங்கே வந்திருந்த உள்ளூர் வங்கி மானேஜரிடம், 'இதை பாங்க் லாக்கர்லே வெச்சுக்கோ,அப்புறம் கொடுக்கலாம்' என்றார்கள்.

இரண்டு நாள் கழித்து அதே பிராமணர் வந்து, கோவென்று கதறி அழுதார். வீட்டில் எல்லாச் சாமான்களும், திருட்டுப் போய்விட்டனவாம்.முதல் நாள் இரவில்.

மீதமிருந்த சொத்து, லாக்கரில் இருந்த வளையல்கள் தான் !

'பெரியவா அனுக்ரஹத்தாலே தங்க வளையலாவது தப்பிச்சுது…'

பெரியவா சிரித்துக் கொண்டே, 'தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு,போ' என்று கூறி பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.

அந்த வளையல்களின் அன்றைய மதிப்பு ரூபாய் இருபதாயிரம் !

இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகளைக் கண்ணால் பார்த்து அனுபவிக்கும் பாக்கியம் அப்போதைய கைங்கர்யபரர்களுக்குக் கிடைத்தது என்றால், அது பூர்வ ஜன்ம புண்ணியப் பலன் !.

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செ...