Monday, April 6, 2020

""இந்தப் பதவி சாத்தியமே இல்லை’

பெரியவா சரணம் !!

""இந்தப் பதவி சாத்தியமே இல்லை’ என்று தீர்மானித்து, காஞ்சிப் பெரியவாளின் ஆசியை அடுத்த கணத்தில் இருந்து மறந்தே போனேன்.  ஆனால் நடமாடும் தெய்வத்தின் தீர்க தரிசணத்தை எண்ணணி வியந்து போனேன்""

அன்பரின் தந்தை, சென்னை நீதிமன்றத்தில் கிளார்க்காகப் பணிபுரிந்து வந்தவர். அப்போது காஞ்சிப் பெரியவர், சென்னை நகரில் முகாமிட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் அன்பரின் தந்தையும் பங்கேற்று சேவை புரிந்தாராம். அன்பரின் தந்தை ஓடியாடி உழைத்த விதத்தை காஞ்சி பெரியவாள் நேரில் கண்டார்.

முகாம் நிறைவுறும் நாள் வந்தது. அன்றைய தினம், அன்பரின் தந்தையைக் கரிசனத்துடன் அழைத்த பெரியவாள், ”எங்கே வேலை பாக்கறே?” என்று கேட்டிருக்கிறார்.

”கோர்ட்ல கிளார்க்கா வேலை பாத்துண்டி ருக்கேன்” என்று பவ்யமாக பதில் அளித்தாராம் அன்பரின் தந்தை.

உடனே பெரியவாள், ”இதுக்கு மேல என்ன பதவி இருக்கு?” என்று கேட்க… ”ஷெராஸ்தார்” என்று பதிலளித்திருக்கிறார் இவர்.

இதையடுத்து பெரியவாள், ”நீ ஷெராஸ்தார் ஆயிடுவே” என்று ஆசீர்வதித்திருக்கிறார்.

சாதாரண கிளார்க் உத்தியோகத்தில் இருந்து ஷெராஸ்தார் பொறுப்புக்கு வருவதற்குக் கல்வி உள்ளிட்ட தகுதிகள் அவசியம். ஆனால் இந்த அன்பரின் தந்தைக்குக் கல்வித் தகுதி மட்டும் இல்லை. எனவே, ‘இந்தப் பதவி சாத்தியமே இல்லை’ என்று தீர்மானித்து, காஞ்சிப் பெரியவாளின் ஆசியை அடுத்த கணத்தில் இருந்து மறந்தே போனார்.

இதையடுத்து ஒரு சில நாட்களில் டெல்லியில் இருந்து தலைமை நீதிபதி சென்னைக்கு வந்துள்ளார். அவருக்குத் தேவையான பணிவிடைகளை சிறப்பாகச் செய்து கொடுத்தாராம் அன்பரின் தந்தை.

சில நாட்கள் கழித்து, வேலை முடிந்து தலைமை நீதிபதி டெல்லிக்குக் கிளம்பிச் செல்லும்போது, நீதிமன்ற அலுவலகக் குறிப்பேட்டில், ‘இந்த கிளார்க்கின் பணி பாராட்டுக்குரியது. அடுத்த பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர் இவர்’ என்று பரிந்துரை செய்திருந்தாராம்!


பிறகென்ன? உரிய நேரத்தில் அந்தப் பரிந்துரை உயரதிகாரிகளால் கவனிக்கப்பட்டு, அன்பரின் தந்தைக்கு ஷெராஸ்தார் எனும் பதவி உயர்வு கிடைத்ததாம்.

சில வருடங்களுக்குப் பின், காஞ்சிப் பெரியவர் மீண்டும் சென்னை வர… அன்பரின் தந்தை அந்த முகாமுக்குச் சென்று பெரியவாளை தரிசித்து வணங்கியிருக்கிறார்.

”என்ன… ஷெராஸ்தாரர் ஆயாச்சா?” என்று மெள்ள புன்னகைத்தபடியே பெரியவாள் கேட்டதும், அந்த நடமாடும் தெய்வத்தின் தீர்க்க தரிசனத்தை எண்ணி வியந்து போனாராம் அன்பரின் தந்தை.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !! 
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

""பொட்டலத்தில் என்ன இருக்கிறது?” மகான் கேட்கவும் இல்லை பார்க்கவும் இல்லை""

பெரியவா சரணம் !!

""பொட்டலத்தில் என்ன இருக்கிறது?” மகான் கேட்கவும் இல்லை பார்க்கவும் இல்லை""

மகாபெரியவா எப்போது எந்த பக்தனுக்கு எந்த பக்தைக்கு அருள் பாலிப்பார் என்று யாருக்குமே தெரியாது தம் முன் நிற்கும் பக்தர்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்பதைத் துல்லியமாக அறிந்த மகா பிரபு அவர் .

புதுக்கோட்டை ராதா ராமமூர்த்தி எனும் பக்தையின் அனுபவம் இதற்கு ஒரு சான்று


தொடர்ச்சியாக ஸ்ரீமடத்திற்கு வந்து மகானை தரிசித்து மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருப்பவர் . மகானை தரிசிக்க செல்லும் போதெல்லாம் அவருக்கு முன் எதையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று காணிக்கையை எடுத்துப் போவதில் அந்த பக்தைக்கு அதீத மகிழ்ச்சி.
ஒரு முறை தரிசனத்திற்குப் போகும் போது தன் மனதில் தோன்றியபடி, சிறிய அருகம்புல் மாலையைத் தொடுத்து ஓரத்தில் அரளிப் பூவை பார்டர் ஆக அமைத்து அழகிய மாலையாக தொடுத்தார், மாலையோடு கொஞ்சம் கல்கன்ன்டும் எடுத்துக் கொண்ட அந்த பக்தை, இரண்டையும் தனித்தனி பொட்டலங்களாக கட்டி தரிசனத்திற்கு சென்றபோது மகானின் முன் வைத்து சமர்பித்தார் எட்ட நின்று தரிசித்தார் .


அதை எப்போது எடுத்துக் கொள்ளப் போகிறாரோ என்று கத்துக் கிடந்த பக்தைக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது, இரண்டு பொட்டலங்களையும் சற்று தூரம் தள்ளி வைத்து விட்டார் , மகான் அதில் என்ன இருகின்றது என்றும் பார்க்கவில்லை, அது யாருடைய கண்களுக்கும் புலப்படவில்லை.

அதற்குள் இருப்பதை மகான் அறிவார் என்பதை நினைத்துகொண்டு பக்தை ஓரமாக நின்றுகொண்டிருந்தார், எட்டு மணிக்கு வந்த பக்தை மணி பத்து ஆகியும் அப்படியே நின்று மகான் அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் வரை அங்கிருந்து நகருவதில்லை என்ற உறுதியோடு இருந்தார் என்றே சொல்லலாம்.

சுமா பத்து மணிக்கு ஒரு பெண் மகானை தரிசிக்க வந்தார் அந்த பெண்மணி கையில் ஒரு வெள்ளிக் கவசம், பிள்ளையாருக்கு போட்ட வேண்டிய கவசம் மகானின் உத்திரவுப்படி அந்தபெண்ணின் ஊர்கோவிலில் பிள்ளையாருக்கு மிகவும் நேர்த்தியான வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டு இருந்தது , மகா பெரியவர் அனுக்கிரகத்திற்காக அதை கொண்டு வந்து இருந்தார் .

அந்தக் கவசத்தை தன் கையில் வாங்கிய மகான் தன் மடியில் வைத்துக் கொண்டார் , பிறகு மடத்து சிப்பந்தியை அழைத்து எட்ட இருந்த இரு பொட்டலங்களைக் காட்டி “அதை எடு ” என்றார் .

ராதா ராமமூர்த்தியை தவிர அந்த பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது அல்லவா
அதில் ஒரு பொட்டலத்தை பிரிக்கச் சொன்னபோதுதான் வெள்ளிப் பிள்ளையார் கவசத்திற்கே சொல்லி வைத்தாற்போல் ஒரு அருகம்புல் மாலை அதிலிருந்ததை எல்லாரும் கண்டனர்

இதில் அதிசயம் என்னவென்றால் ”பொட்டலத்தில் என்ன இருக்கிறது?” மகான் கேட்கவும் இல்லை பார்க்கவும் இல்லை ஆனால் அது பிள்ளையாருக்கு உரிய மாலை என்று எப்படி தீர்மானித்தார்? அதுதான் மகாபெரியவாளின் அருட்பார்வை

மாலையை அந்த வெள்ளிக் கவசத்திற்கு மகான் சாத்தியபோது கச்சிதமாக அந்த பிள்ளையாருக்கே அளவெடுத்து தொடுத்தது போல் அமைந்திருந்தது. மாலையுடன் அந்த வெள்ளிக் கவசத்தை தமது திரு மார்பில் பொருத்தி வைத்துக் கொண்டு நாலா புறமும் திரும்பி திரும்பி ஸ்ரீபெரியவா தரிசனம் கொடுத்தபோது எல்லா பக்தர்களுக்கும் அது ஆனந்தமாக இருந்தது ஆனால் ராதா ராமமூர்த்தி
என்ற பக்தைக்கு அந்த ஆனந்தம் பன்மடங்கு அதிகமாக இருந்தது .

எங்கிருந்தோ வந்த புதுக்கோட்டை ராதா என்னும் பக்தை மனதில் மகானுக்கு அருகம்புல் மாலையைச் சமர்பிக்க வேண்டும் என்று தோன்ற வேறொரு பக்தை அதேசமயம் வெள்ளிப் பிள்ளையார் கவசத்தை கொண்டுவந்து மகானின் அனுக்கிரகம் பெற வந்து நிற்க, பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாதவராக இரண்டு மணி நேரம் மகான் நாடகமாட ஆனால் எல்லாம் இதற்குதான் என்று இரு பக்தைகளின் மனபூர்வமான பக்திக்கு அங்கீகாரம் அளித்தது போன்று அமைந்தது இந்த சம்பவம்.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா

 மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பந்தநல்லூர் துர்கையின் பாரத்தை இறக்கிய பெரியவா நம்முடைய கோவில்களில் உள்ள மூர்த்தங்களுக்கு ப்ராண ப்ரதிஷ்டை செ...